🎵 Lyrics
இரங்கும் தேவனே
எந்தன் மீதிலே
உந்தன் பார்வை எந்தன் மீதில்
விழுந்தால் போதுமே
1. யோபுவை அன்று பார்த்தீர்
இழந்த எல்லாம் தந்தீர்
என்னை இன்று பாரும்
இரண்டு மடங்கு தாரும்
2. ஆகாரை அன்று பார்த்தீர்
அலைச்சல் எல்லாம் அறிந்தீர்
தாகம் தீர்க்கும் துரவு
தந்து தாகம் தீர்த்தீர்
3. பேதுருவை அன்று பார்த்தீர்
பின்மாற்றம் எல்லாம் மன்னித்தீர்
என்னை இன்று பாரும்
எழுந்து ஒளி வீசச் செய்யும்