🎵 Lyrics
கர்த்தருக்குள் நான் களிகூறுவேன்
தேவனுக்குள் நான் மகிழுவேன்
தேவாதி தேவன் ஜீவ ஊற்று
தேடிப் பருகிடுவேன்
1. மலைகளை நீ மிதித்திடுவாய்
குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
நீ அதைத் தூற்றிடுவாய்
அது பறந்து மறைந்துவிடும்
2. நான் பாடும் போது நீர் மீட்ட என்
ஆத்துமா கெம்பீரிக்கும்-நான்
வீணையை மீட்டு துதிப்பேன்
சுரமண்டலம் கொண்டு பாடுவேன்
3. தேவ தேவன் என் பெலனானவர்
மான் கால்கள் போலாக்குவார்
உயர்ந்த ஸ்தலங்களிலே
என்னை நடக்கப் பண்ணிடுவார்