🎵 Lyrics
நல்மேய்ப்பர் இயேசுவே
எனக்கொன்றும் குறைவில்லை
1. ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்
ஆண்டவர் அன்பினையே, இம்மட்டும் காத்தீர்
இனிமேலும் காப்பீர் என்றென்றும் நடத்துவீர்
ஆ………ஆ……..எந்நாளும் போஷிப்பீர்
2. கர்த்தரைத் தேடிடும் மாந்தருக்கோ
ஒரு குறை என்றுமில்லை, கர்த்தரைத் தேடுவோம்
நித்தியம் சேருவோம் கண்ணீர் அங்கில்லை
ஆ………ஆ……..கவலை அங்கில்லை
3. இயேசு கிறிஸ்து தம் மகிமையிலே
குறைகளை எல்லாம் நிறைவாக்குவார்
நிறைவான இயேசு வந்திடுவார்
குறைகள் ஒழிந்திடும்
ஆ………ஆ……..கறைகள் மறைந்திடும்