🎵 Lyrics
பயப்படாதே நான் உனக்கு
துணை நிற்கிறேன் என்றுமே
வலது கையைப் பிடித்துக் கொண்டு
திடன் கொள் என்று சொல்கிறேன்
1. கடலினிலே மூழ்கிடுவேன் என்று சொல்வாயோ
கலங்காதே நான் உன் கரம் பற்றினேன்
கலங்கிடாதே, திகைத்திடாதே
நானே உனக்கு துணை நிற்கிறேன்
2. ஆபத்திலே என்னை நோக்கிக் கூப்பிட்டு
நான் உனக்கு மறுமொழி கொடுத்திடுவேன்
ஆபத்திலே நானே துணையாக நின்று
அற்புதமாக உன்னை நடத்திடுவேன்
3. மனிதர் உன்னை புறக்கணித்து தள்ளினாலும்
நான் உன்னை புறம்பே தள்ளுவதில்லை
கலங்கிடாதே சோர்ந்திடாதே
நான் என்றும் உன்னுடனே இருக்கிறேன்