🎵 Lyrics
ராஜாவின் பிரசன்னம்
எப்போதும் ஆனந்தம்
மகிமையின் ராஜனை
தரிசிக்கும் நேரமே
அன்பே அன்பே
அன்பே என் அன்பே
1. தூதர்கள் பாடிடும்
பரலோக கீதமே
நாங்கள் கேட்டிட
உள்ளம் எல்லாம் பொங்குதே
2. வெண்ணாடை அணிந்து
குருத்தோலை ஏந்தி
ஓசன்னா பாடி
ஓய்வின்றித் துதிப்பேன்
3. நீரே என் கன்மலை
நீரே என் கோட்டை
நீரே என் அடைக்கலம்
நீரே என் நம்பிக்கை