Yaridathil Poven Naan

Vazhvin Geethangal #12

Sung By

Bro. L. Vincent Raj

Share

🎵 Lyrics

யாரிடத்தில் போவேன் நான் இறைவா
உம்மையன்றி யாருஉண்டு தேவா
துதிகளின் பாத்திரரே
ஸ்தோத்திர பாத்திரரே
மகிமைக்கு பாத்திரரே
உம்மையன்றி யாருஉண்டு எனக்கையா

1. வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடமே
உள்ளதையா
வாழ வைக்கும் உந்தன் முகம் தினம்தினம்
பார்ப்பேனையா
கூப்பிடும் காக்கைகளை போஷிக்கும் என் தெய்வமே
கூப்பிடும் எளிய என்னை மறவாத என் நேசரே (துதி)

2. கண்களை கண்ணீருக்கும் கால்களை
இடற்களுக்கும்
தப்புவிக்கும் எந்தன் தேவன் உயிரோடு இருக்கின்றீர்
கண்ணீரை கணக்கில் அல்லோ வைத்து இருக்கிறீர்
அலைச்சல்கள் யாவையும் அறிந்தே இருக்கிறீர் (துதி)

3. எந்தன் தேவையெல்லாம் உமக்குத் தெரியுமையா
எந்தன் குறைவு எல்லாம் நிறைவாக்கி தாருமையா
உமது கைத்திறக்க நான் அதை வாங்கி கொள்வேன்
நன்றி நன்றி என்று நாளெல்லாம் சொல்லிடுவேன் (துதி)